Blogger Tricks

ஆண்டு விழா பெயர்கள்



வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா



அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா                - மு. வரதராசனார்

தென்னாட்டு பெர்னாட்ஷா       - அறிஞர் அண்ணா
 
நாடகத் தந்தை                                      - பம்மல் சம்பந்த முதலியார்

நாடகத் தலைமை ஆசிரியர்     - சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ்நாட்டின் மாப்பசான்                - புதுமைப்பித்தன்

புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்

கவிமணி                                                 - தேசிய விநாயகம் பிள்ளை

குழந்தைக் கவிஞர்                            - அழ. வள்ளியப்பா

தொண்டர் சீர்பரவுவார்                   - சேக்கிழார்

கவிச்சக்ரவர்த்தி                                 - கம்பன்

விடுதலைக்கவி, தேசியக்கவி   - பாரதியார்

தமிழ்த்தென்றல்                                  - திரு.வி.க.

ஆளுடை நம்பி                                   - சுந்தர்ர்

ஆட்சி மொழிக் காவலர்                - இராமலிங்கனார்

கிருத்துவக் கம்பர்                             - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

சொல்லின் செல்வர்                          -  இரா. பி. சேதுபிள்ளை 

மூதறிஞர்                                              - இராஜாஜி

பேரறிஞர்                                              - அண்ணா

பகுத்தறிவுப் பகலவன்                   - பெரியார்

செக்கிழுத்த செம்மல்                      - வ.உ.சி.

தசாவதானி                                          - செய்குத் தம்பியார்

இசைக்குயில்                                      - எம்.எஸ். சுப்புலட்சுமி

மொழி ஞாயிறு                                  - தேவநேயப் பாவாசர்

பாவலர் ஏறு                                        - பெருஞ்சித்தரனார்

கல்வியிற் பெரியவர்                      - கம்பர்

சிறுகதை மன்னன்                            - புதுமைபித்தன்

திருவாதவூரார்                                   - மாணிக்க வாசகர்

முத்தமிழ் காவலர்                            - கி.ஆ.பெ. விசுவநாதம்

Some Useful videos....

TNPSC General Knowledge in Tamil

TNPSC டிப்ஸ்




ஒன்றேயென்னின்என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )
கவிப் பேரரசர் (கம்பர்)
கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)
கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)
கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)
கவிச்சக்கரவர்த்திஎனப் போற்றப்படுபவர் (கம்பர்)
மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்)
தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஆசிரியர்என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
கற்றோரால் புலவரேறுஎனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)
யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்)
நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)
கத்தியின்றி இரத்தமின்ம்றிஎன்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்)
நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)
நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)
முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)
சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி)
உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு)
புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)
தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)
புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்)
அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
அகம்என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு)
அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள் (பாலை)
அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12)
நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
கபிலரை நல்லிசைக் கபிலர்எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
கபிலரை வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
கபிலரை புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்)
ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர் (ஓரம்போகியார்)
ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை)
திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)
குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)
திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)
திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)
திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)
திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)
திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)
பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடுஎனப் பாடியவர் (பாரதியார்)
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமேஎனப் பாடியவர் (பாரதிதாசன்)
திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)
திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)
முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)
கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)
முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)
சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)
இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)
சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)
சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)
சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)
மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)
யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)
நெஞ்சையள்ளும் சிலம்புஎனப் பாராட்டியவர் (பாரதியார்)
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்எனப்பாராட்டியவர் (கவிமணி)
வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)
கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)
கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)
மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)
கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)
ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
ஆதிகவிஎன்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)
சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)
தனயைஎன்னும் சொல்லின் பொருள் (மகள்)
இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)
வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)
தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)
தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)
கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)
வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)
பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)
பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)
தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)
புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவைஎன்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)
பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயேஎன்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)
பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)
பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)
பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)
உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
பேதைப் பருவத்தின் வயது (5-7)
பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
மங்கைப் பருவத்தின் வயது (12-13)
மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
அரிவைப் பருவத்தின் வயது (20-25)
தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
ஒட்டம்என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இறுதி)
ஆதி என்னும் சொல்லின் பொருள் (முதல்)
சொற்றொடர்நிலை என்பது ____________ ஆகும். (அந்தாதி)
திருவேங்கடத்து அந்தாதியைப் பாடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
அழகிய மணவாளதாசர்என அழைக்கப்படுபவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
திவ்வியகவிஎன அழைக்கப்படக் கூடியவர் (பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்)
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிய எட்டு நூல்களின் தொகுப்பிற்குப் பெயர் (அஷ்டப் பிரபந்தம்)
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ____________ அவையில் அலுவலராய்ப் பணியாற்றினார். (திருமலை நாயக்கர்)
கதம்பம் என்பது கலம்பகமாகத் திரிந்ததாகக் கருதியவர் ___ (உ.வே.சா)
கலம் என்பதன் பொருள் (பன்னிரண்டு)
கலம்பகத்தின் உறுப்புகள் ______________ (பதினெட்டு)
தகமிழில் தோன்றிய முதல் கலம்பகம் (நந்திக்கலம்பகம்)
மதுரைக் கலம்பகத்தைப் பாடியவர் (குமரகுருபரர்)
மதுரைக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் (சொக்கநாத பெருமான்)
பிறந்தது முதல் ஐந்தாண்டுகள் வரை பேசாது இருந்த புலவர் (குமரகுபரர்)
குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு (இன்னோசை)
சைவத்தையும் தமிழையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் (குமரகுபரர்)
சேரி மொழியாற் செவ்விதின் கிளந்துபாடப்படும் இலக்கியம் (பள்ளு)
புலன்என்னும் இலக்கிய வகை ___ ஆகும். (பள்ளு)
முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (சிந்து)
முக்கூடற்பள்ளின் ஆசிரியர் (பெயர் தெரியவில்லை)
சைவ வைணவங்களை ஒன்றிஒணைக்கும் நூல் (முக்கூடற்பள்ளு)
இலக்கிய மறுமலர்ச்சி9 யாருடைய காலத்தில் இருந்து தொடங்குகிறது (பாரதியார்)
மாலைக்கால வருணனைஇடம்பெற்றுள்ள நூலின் பெயர் (பாஞ்சாலி சபதம்)
மாலைக்கால வருணனை யார் யாரிடம் கூறியது (அர்ச்சுனன் பாஞ்சாலியிடம்)
வடமொழியில் பாரதம் இயற்றியவர் (வியாசர்)
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் (ஐந்து)
மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தில் _____________ சருக்கத்தில் அமைந்துள்ளது. (அழைப்புச் சருக்கம்)
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்எனப் பாடியவர் (பாரதியார்)
பாரதியார் பிறந்த ஊர் (எட்டயபுரம்)
பாரதிஎன்னும் சொல்லின் பொருள் (கலைமகள்)
தமிழ்நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையென்னும் வசை நீங்கவந்து தோன்றியவர் (பாரதியார்)
பாட்டுத் திறத்தால் இந்த வையத்தைப் பாலித்திடச் செய்தவர் (பாரதியார்)
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்என்று சொன்னவர் (பாரதியார்)
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்எனச் சொன்னவர் (பாரதியார்)
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் (பாரதியார்)
பாரதியார் எழுதிய உரைநடை நூல் (ஞானரதம், தராசு)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்எனப் பாடியவர் (பாரதியார்)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லேஎனப் பாடியவர் (பாரதியார்)
செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் (பாரதிதாசன்)
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்என்று பாடியவர் (பாரதிதாசன்)
வாணிதாசன் பிறந்த ஊர் (வில்லியனூர்)
வாணிதாசனின் இயற்பெயர் (அரங்கசாமி என்ற எத்திராசலு)
பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்ற கவிஞர் (வாணிதாசன்)
தமிழ் பிரெஞ்சு கையகர முதலி வெளியிட்டவர் (வாணிதாசன்)
பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் (வாணிதாசன்)
பாவலர்மணி, கவிஞரேறு முதலான பட்டங்கள் பெற்றவர் (வாணிதாசன்)
வாணிதாசன் பாடல்களில் சிறந்து விளங்குவது (இயற்கை)
தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் எனப் பாராட்டப்படுபவர் (வாணிதாசன்)
காடுஎன்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (எழிலோவியம்)
இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை எனப் பாடியவர் (சுரதா)
பாரதிதாசனின் தலை மாணாக்கர் (சுரதா)
சுரதா பிறந்த ஊர் (பழையனூர்)
சுரதாவின் இயற்பெயர் (இராச கோபாலன்)
சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் (தேன்மழை)
உவமைக் கவிஞர் எனப் பாராட்டப் பட்டவர் (சுரதா)
தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதல் புலவர் (சுரதா)
மனிதநேயம் என்னும் பாடல் இடம் பெற்ற நூல் (நல்ல உலகம் நாளை மலரும்)
இமயம் எங்கள் காலடியில் என்னும் நூலின் ஆசிரியர் (ஆலந்தூர் கோ.மோகனரங்கன்)
தமிழக அரசின் பரிசினைப் பெற்ற ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் நூல் (இமயம் எங்கள் காலடியில்)
வேலைகளல்ல வேள்விகளே என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (இது எங்கள் கிழக்கு)
இது எங்கள் கிழக்குநூலின் ஆசிரியர் (தாரா பாரதி)
விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி என்ற நூல்களின் ஆசிரியர் (தாரா பாரதி)
தீக்குச்சி என்னும் பாடல் இடம்பெற்ற நூல் (சுட்டுவிரல்)
மரபுக்கவிதையின் வேர் பர்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டவர் (அப்துல்ரகுமான்)
பால்வீதிநூலின் ஆசிரியர் (அப்துல்ரகுமான்)
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர் (அப்துல்ரகுமான்)
தமிழக அரசின் பாரதிதாஅன் விருது பெற்ற கவிஞர் (அப்துல்ரகுமான்)
தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னைவிருது பெற்றவர் (அப்துல்ரகுமான்)
சுந்தரர் தேவாரம் பன்னிரு திருமுறை வைப்பில் __________ திருமுறை (ஏழாம்திருமுறை)
சுந்தரர் பிறந்த ஊர் (திருநாவலூர்)
சுந்தரரின் இயற்பெயர் (நம்பியாரூரர்)
சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர் (நரசிங்க முனையரையர்)
தம்பிரான் தோழர்என்று அழைக்கப் பட்டவர் (சுந்தரர்)
திருத்தொண்டர் புராணம் எழுதத் துணை புரிந்த சுந்தரரின் நூல் (திருத்தொண்டத் தொகை)
சுந்தரரின் காலம் (கி.பி.9)
மணிமேகலையின் ஆசிரியர் (சீத்தலைச் சாத்தனார்)
தண்டமிழ் ஆசான் சாத்தன் என அழைக்கப் பட்டவர் (சீத்தலைச் சாத்தனார்)
யார் வேண்டிக் கொண்டதற்கிணங்க இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் (சீத்தலைச் சாத்தனார்)
மணிமேகலையின் காலம் (கி.பி.2)
மணிமேகலை _____________ சமயக் காப்பியம் (பௌத்தம்)
மணிமேகலை ___________ காதைகளை உடையது (30)
நீலகேசியின் ஆசிரியர் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
நீலகேசியின் வேறுபெயர் (நீலகேசித் தெருட்டு)
நீலகேசி _________________ சமய நூல் (சமணம்)
இயேசுபெருமானை வாழ்த்தும் பாடல் இடம்பெற்ற நூல் (இரட்சண்ய யாத்திரிகம்)
இரட்சண்யம் என்பதன் பொருள் (ஆன்ம ஈடேற்றம்)
இரட்சண்ய யாத்திரிகத்தின் ஆசிரியர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை0
கிறித்துவக் கம்பர் என அழைக்கப் பட்டவர் (எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை)
சீறாப்புராணத்தை இயற்றியவர் (உமறுப்புலவர்)
உமறுப்புலவரின் ஆசிரியராக இருந்தவர் (கடிகைமுத்துப் புலவர்)
யார் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார் (வள்ளல் சீதக்காதி)
வள்ளல் சீதக்காதி மறைந்த பின் உதவிய வள்ளல் (அபுல் காசிம்)
சின்னச் சீறாவை எழுதியவர் (பனு அகுமது மரைக்காயர்)
முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலான நூல்கலின் ஆசிரியர் (உமறுப்புலவர்)
திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் (பெரியவாச்சான் பில்ளை)
ஆழ்வார்களின் எண்ணிக்கை (பன்னிரண்டு)
ஆழ்வார்கள் அருளிய நூல் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
குலசேகர ஆழ்வார் எழுதிய நூல் (பெருமாள் திருமொழி)
பெருமாள் திருமொழி பாடல்களின் எண்ணிக்கை (105)